Double Acting and Movie Review and Tamil Movie and சூரியா19 Nov 2008 12:00 pm

வார‌ண‌ம் ஆயிர‌ம்

ஒரு கீழ்த்த‌ர‌ குடும்ப‌த்தில் த‌ந்தைக்காக‌ எடுக்க‌ப்ப‌ட்ட‌து சேர‌னின் த‌வ‌மாய் த‌வ‌மிருந்து.
ஒரு ந‌டுத்த‌ர‌ குடும்ப‌த்தில் த‌ந்தைக்காக‌ எடுக்க‌ப்ப‌ட்ட‌து கௌத‌மின் வார‌ண‌ம் ஆயிர‌ம்.

இது தான் ப‌ட‌ம். த‌வ‌மாய் த‌வ‌மிருந்து போல‌வே மிக‌ நீள‌மான‌, மிக‌வும் குறைந்த‌ வேக‌த்தில் ந‌க‌ரும் ப‌ட‌ம்.

என‌க்கு இந்த‌ப் ப‌ட‌ம் கொஞ்ச‌ம் ய‌தார்த்த‌ம் குறைந்த‌தாக‌வே காண‌ப்ப‌டுகிற‌து. ந‌டுத்த‌ர‌ குடும்ப‌த்து த‌ந்தை த‌ன‌து ஒரே ம‌க‌னை, ஒரு பெண் பிள்ளையையும் வைத்திருப்ப‌வ‌ர், ப‌ண‌ம் செல‌வ‌ழித்து இந்தியாவில் இருந்து அமெரிக்கா அனுப்புவாரா ம‌க‌னின் காத‌லியைக் க‌ண்டுபிடிக்க‌? எந்த‌ வித‌ யோச‌னையும், எதிர்ப்பும் இல்லாம‌ல் ஒரு த‌ந்தை அனுப்புகிறார் என்ப‌து ய‌தார்த்த‌த்திற்கு ஒத்துவ‌ராத‌து போல் தோன்றுகிற‌து. இந்தியாவில் இருந்து அமெரிக்கா போக‌ ஏற்ப‌டும் விமான‌ச் சீட்டின் செல‌வே அதிக‌ம், ப‌த்தாத‌த‌ற்கு அமெரிக்காவில் 90 நாட்க‌ள் இருக்கிறாராம். சில‌ வேளை கௌத‌மின் த‌ந்தை அப்ப‌டி அனுப்பினாரோ என‌க்குத் தெரியாது.

ஆனால், வேறு எந்த‌ க‌தாநாய‌க‌னுக்கும் கிடைக்காத‌ வாய்ப்பு சூரியாவிற்கு என்று சொல்லுவேன். இந்த‌ப் ப‌ட‌த்தில் ப‌ல‌ வித‌ கெட்ட‌ப்பில் சூரியா வ‌ல‌ம் வ‌ருகிறார். வாழ்க்கையின் ஒவ்வொரு ப‌டியிலும் சூரியா வித்தியாச‌மாக‌த் தெரிகிறார். அவ‌ரின் அழ‌குத் தோற்ற‌ம் ஒவ்வொரு வேச‌த்திற்குமே அழ‌காக‌த் தான் இருக்கிற‌து. ஒன்றுகூட‌ இர‌சிக்க‌ முடியாம‌லில்லை. நான் நினைக்கிறேன், க‌ம‌ல் ஹாச‌னுக்குப் பிற‌கு ப‌ல‌ வித‌ கெட்ட‌ப்புக‌ள் அழ‌காக‌ப் பொருந்திய‌ ஆள் சூரியா என்று சொல்ல‌லாம்.

த‌ந்தையாக‌ வ‌ரும் சூரியா ந‌டிப்பில் முதிர்ந்து தெரிகிறார். வேறுப‌டுத்திக் காட்டிய‌தால், நான் முத‌லில் வேறு யாரோ என்று எண்ணிவிட்டேன். ஒப்ப‌னை ந‌ன்றாக‌வே செய்திருக்கிறார்க‌ள் ப‌ட‌ம் முழுக்க‌.

பாட‌ல்க‌ள் எல்லாம் இர‌சிக்க‌க் கூடிய‌தாக‌வே இருக்கிற‌து. ஜோக்கிற்கு என்று யாரும் த‌னியாக‌‌ இல்லை. சூரியாவே செய்கிறார். ஆனால், ஜோக் அதிக‌மாக‌ இல்லை என்ற‌ ஏக்க‌ம் வ‌ர‌வில்லை.

ம‌க‌ன் திரும‌ண‌ம் செய்து பிள்ளை உண்டு என்று காட்டுகிறார்க‌ள், ஆனால், ம‌க‌ள் அப்ப‌டியே இருக்கிறா.

என‌க்கு என்ன‌மோ சேர‌னின் த‌வ‌மாய் த‌வ‌மிருந்து ப‌டம் அள‌விற்கு இது தாக்க‌த்தை ஏற்ப‌டுத்த‌வில்லை. த‌வ‌மாய் த‌வ‌மிருந்து ப‌ட‌த்தில், த‌ந்தை வ‌ல்ல‌வ‌ர், சூர‌ர், ந‌ல்ல‌வ‌ர் என்று சொல்லி சொல்லி க‌தை ந‌க‌ர‌வில்லை. ய‌தார்த்த‌மாக‌ ந‌க‌ர்ந்து த‌ந்தையின் க‌தாபாத்திர‌த்தை உண‌ர்த்தி நிற்கிற‌து. வார‌ண‌ம் ஆயிர‌ம் ப‌ட‌த்தில் த‌ந்தையைப் புக‌ழ்ந்தே க‌தை ந‌க‌ர்கிற‌து. இன்னும் சொல்ல‌ப் போனால், ம‌க‌னின் க‌தையே!

Movie Review and Tamil Movie and நந்தா and ஷெரின்04 Oct 2007 09:39 am

நல்ல கலர்வுல்லான திரையோட்டம்.

உற்சாகம்

அருமையான பாடல்கள் [முத‌ல் பாடலைத் தவிர‌]. “நறும் பூக்கள் தேடும் திருத்தும்பியே…” எனக்குப் பிடித்த பாடல். நல்ல காட்சியமைப்பு. ஷெரினை இந்தப் பாட்டில் தான் நன்றாக உபயோகப்படுத்தியிருக்கிறார்கள். ;) வேறு எங்கும் ஆபாச‌மே இல்லை.

ந‌ந்தா அள‌வுக்க‌திக‌மாக‌ மெலிந்து விட்டார். முத‌ல் இருந்த‌ handsome இப்போது குறைவே. வில்ல‌னுக்கும் க‌தானாய‌க‌னுக்கும் தாடியை எடுக்க‌ இய‌க்குன‌ர் விட‌வில்லை போலும். எப்போதும் தாடியுட‌னே அலைகிறார்க‌ள். ஆனால், ந‌ன்றாக‌த் தான் இருக்கிற‌து.

விவேக்: சிரிப்பு வரவில்லை.

Movie Review and Tamil Movie and தங்கர் பச்சான்03 Oct 2007 07:57 am

சேரனின் “Autograph” படத்தை உங்களுக்குப் பிடித்திருந்தால் நீங்கள் கட்டாயம் பார்க்கவேண்டிய படம் “பள்ளிக்கூடம்”.

இள வயது கதாநாயகன், கதாநாயகியாக இருவர் நடித்திருக்கிறார்கள்.

அதே போல் பழைய நினைவுகளை அசை போட்டு யதார்த்தத்தை படம்பிடித்திருக்கிறார்கள். பாடசாலை போன அனைவருக்கும் ஓர் உணர்ச்சிக் காவியமாக பொங்கி வழியும் என்பதில் ஐயமில்லை. பாடசாலை போகாதவர்களை கட்டாயம் ஏங்க வைக்கும்.

சினேகா [கோகிலாவாக] மிகச் சரியான தேர்வு. உணர்ச்சிகளை அழகாக வெளிப்படித்தியிருக்கிறார். அட தங்கர் பச்சான் [படத்தின் இயக்குனர்] கூட அழகாக நடித்திருக்கிறார் “ஐயோடி குமரு” ஆக.

பாடல்கள் அற்புதமாக இருக்கிறது. இசையும் வரியும் மனதிற்கு நெகிழ்ச்சியைக் கொடுக்கிறது. குத்துப் பாட்டை எதிர்பார்க்காதீர்கள். ஆனால், இள வயது கதாநாயகன், கதாநாயகியாக இருவர் நடித்திருக்கிறார்கள். அவர்களுக்கு என்று ஒரு பாட்டு வரும். அது இளவட்டங்களை ஏங்கவைக்குதோ (அ) தூங்க விடாமல் வைக்குதோ தெரியாது. கிராமத்துக் கலாச்சாரத்தில் இவ்வளவு நெருக்கமாக காட்டியுருப்பது சற்று அதிகமோ என்று யோசித்தால் கூட, அது பாட்டில் மட்டுமே என்பதால் பரவாயில்லை என்பது என் எண்ணம்.

சினேகாவின் நடிப்பை சொல்லி வேலையில்லை. படத்தைப் பாருங்கள். நெற்றியிலிருந்து கழுத்துவரை நடிக்கிறது.

எனக்கு இந்தப் படத்தின் தாக்கம் சற்றுக் குறைவாகவே இருக்கிறது. ஏனெனில், இலங்கையின் இனப்பிரச்சினை காரணமாக், நான் ஒரு பள்ளிக்கூடத்தில் என்று நெடுங்காலம் படிக்கவில்லை. இலங்கை இராணுவ ஆக்கிரமிப்பு, இந்திய இராணுவ ஆக்கிரமிப்பு என்று எப்போதும் ஊர் விட்டு ஊர் ஓடிக்கொண்டே இருந்ததால் ஒரு பள்ளிக்கூடத்துடனும் எனக்கு நெருக்கமான உணர்வு உருவாகவில்லை.

சரி என்னைப் போல் களவாக படத்தை இணையத்தில் தரையிறக்கி கணினியில் பார்க்காமல், திரையரங்கிற்குச் சென்று பாடசாலை நண்பர்களுடன் பாருங்கள்.

pallikoodam

Movie Review and சத்தியராஜ் and வரலாறு19 Jul 2007 07:57 am

“பெரியார்” படம் பார்த்து முடிததுவிட்டேன்.

பெரியார் கம்யூனிசத்தை ஆதரித்தார் என்று எனக்கு இப்பத் தான் தெரியும்.
பெரியார் தான் வகுப்பு வாரி அனுமதி வேலைவாய்ப்பைக் கொண்டுவர காரணமானவர்
என்றும் இப்பதான் தெரிகிறது. [சாதி முறையில் வேலை வாய்ப்பு]

“பெரியார்” படத்தில் அவர் கம்யூனிசத்தை ஆதரிப்பதாகத் தான் சொல்கிறார்.
கம்யூனிசம் வேண்டும் மக்களின் பொருளாதாரத்தை உயர்த்த என்றும், சாதியை முதலில்
ஒழிக்க கம்யூனிசத்தை சற்று தள்ளி வைப்போம் என்றும் சொல்கிறார். அவர்
சொல்கிறார், தன்னை பொருளாதாரம் வேண்டுமா, சாதி ஒழிய வேண்டுமா என்று கேட்டால்
சாதி ஒழிய வேண்டும் என்று சொல்வேனாம். ஏனெனில், எவ்வளவு பொருளாதாரத்தில்
உயர்ந்தாலும் தாழ்த்தப்பட்ட சாதிக் காரன் எப்பவும் அப்படியே இருப்பதாகவும்,
உயர்ந்த சாதிக் காரனுக்கு மரியாதை செலுத்தவேண்டி உள்ளதாலும், பொருளாதார
சீர்திருத்தத்தை [கம்யூனிசத்தை] சற்றுத் தள்ளி வைப்போம் என்கிறார்.
இன்னும் அப்படியே இருக்கு தமிழகம்!

Shankar and Tamil Movie26 Jun 2007 07:48 am

சிவாஜி படம் பார்த்தேன்

சூப்பர் ஸ்டார் + சூப்பர் இயக்குனர் = சூப்பர் படம்

படத்தில்:

ரஜினி: “என்னை வைச்சு காமெடி கீமடி பண்ணலியே”
விவேக்: “ஔவ்…்”

அட ரஜினியே காப்பி அடிக்கிற அளவில வடிவேலு இருக்காரப்பா. இதுக்காக வடிவேலுக்கு ரஜினி ஏதாவது கொஞ்சம் கொடுத்திருப்பாரு? அட என்ன எண்டாலும் அவை வடிவேலு பிரபலப்படுத்தியவை தானே?

கனடாவில் இருக்கும் சிறு திரையரங்குகளில் தான் தமிழ்/ இந்திய திரைப்படங்கள் காண்பிக்கப்படுவது வழக்கம்.
ஆனால் ஆங்கில திரைப்படம் ஓடும் பெரிய திரையரங்குகளில் சக்கை போடு போடுகிறது இந்தப் படம். இப்படி வேறு எந்த தமிழ் [இந்திய ] படங்களுமே ஓடினது கிடையாது. இதைப் போல் உலகெங்கிலும் சிவாஜி ஓடி சாதனை படைக்கிறது.

இதற்குக் காரணம் புலம்பெயர்ந்த தமிழீழ மக்கள் என்பதை ரஜினி [/ தமிழ் சினிமா] சிந்திப்பாரா?

Next Page »

Bad Behavior has blocked 10 access attempts in the last 7 days.